நாட்டின் ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்புகளுக்கான சூழல் அமைப்பை மேம்படுத்தும் வகையில் உத்திசார் நடவடிக்கையாக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இன்று ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன நிதியுடன் கூடிய ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் திட்டத்திற்கு (ஆர்.டி.ஐ.)ஒப்புதல் அளித்துள்ளது.
புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், ஆராய்ச்சிப் பணிகளை வர்த்தக மயமாக்குவதிலும் தனியார் துறையின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டமானது தனியார் துறையின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறைந்த அல்லது பூஜ்ய வட்டி விகிதங்களில் நீண்ட கால நிதியுதவி அல்லது மறுநிதியுதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டம் தனியார் துறையின் முதலீடுகளை ஈரப்பதில் உள்ள தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
0 Comments