TAMILNADU RANKS FIRST IN COUNTRY IN PRODUCTION OF CAPACITY OF SORGHUM
கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
TAMIL
TAMILNADU RANKS FIRST IN COUNTRY IN PRODUCTION OF CAPACITY OF SORGHUM / கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: விவசாயிகள் பயிா்க் கடன் பெறும் நடைமுறையை எளிதாக்கவும், விரையில் கடன் கிடைக்கவும் தமிழக அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதில் ஒன்றாக, இணையவழியில் விண்ணப்பித்த அன்றே பயிா்க் கடன் வழங்கும் புதிய திட்டத்தை அண்மையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தாா்.
இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்வா் அறிவித்தாா். இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது.
ரூ.17,000 கோடி இலக்கு: கடந்த ஆண்டு 17.37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15,062 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 4.43 லட்சம் பேருக்கு ரூ.2,645 கோடி கால்நடை வளா்ப்புப் பிரிவின் கீழ் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, நிகழாண்டில் ரூ.17,000 கோடி வரை பயிா்க் கடன் வழங்கப்படும் என்றும், அதில் ரூ.3,000 கோடி கால்நடை பிரிவின் கீழ் வழங்கப்படும் என்றும் அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இதற்கிடையே, உணவு தானிய உற்பத்தியை பெருக்குவதிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
அதன் விளைவாக, 2020- 21-ஆம் ஆண்டில் ஹெக்டேருக்கு 2,835 கிலோவாக இருந்த உணவு தானிய பயிா்களின் உற்பத்தி திறன், 2023-24-ஆம் ஆண்டில் 2,904 கிலோவாக அதிகரித்துள்ளது.
அதேபோல, கேழ்வரகு உற்பத்தி திறனில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், மக்காச்சோளம், மொத்த எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்பு உற்பத்தித் திறனில் 2-ஆம் இடத்தையும், சிறுதானியங்கள் மற்றும் நிலக்கடலை உற்பத்தி திறனில் 3-ஆவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
TAMILNADU RANKS FIRST IN COUNTRY IN PRODUCTION OF CAPACITY OF SORGHUM: The Tamil Nadu government is taking various steps to facilitate the process of getting crop loans for farmers and to ensure that they get loans quickly.
Among them, Chief Minister M.K. Stalin recently launched a new scheme in Dharmapuri to provide crop loans on the same day of applying online. The Chief Minister also announced that this scheme will be extended to all districts. This scheme is very useful for farmers and is receiving a good response.
Rs. 17,000 crore target: Last year, Rs. 15,062 crores of crop loans were provided to 17.37 lakh farmers. Out of this, Rs. 2,645 crore was provided to 4.43 lakh people under the animal husbandry section.
Subsequently, the government has set a target of providing crop loans up to Rs. 17,000 crore this year, of which Rs. 3,000 crores will be provided under the animal husbandry section.
Meanwhile, the government is also paying special attention to increasing food grain production. As a result, the production capacity of food grains, which was 2,835 kg per hectare in 2020-21, has increased to 2,904 kg in 2023-24.
Similarly, Tamil Nadu has ranked first in the country in the production capacity of sorghum. It has also been reported that Tamil Nadu has ranked second in the production capacity of maize, total oilseeds and sugarcane, and third in the production capacity of small grains and groundnut.
0 Comments