தூத்துக்குடி சிப்காட்டில் ரூ.1,156 கோடி முதலீட்டில் உணவுப் பொருட்கள் தயாரிக்கும் ஆலையை ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 24.09.2025 அன்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முன்னிலையில் கையெழுத்தானது.
ரிலையன்ஸ் நிறுவனம் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும் . இதன் வணிகங்களில் எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், இயற்கை எரிவாயு, சில்லறை விற்பனை, பொழுதுபோக்கு, தொலைத்தொடர்பு, வெகுஜன ஊடகங்கள் மற்றும் ஜவுளி ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொது நிறுவனமான ரிலையன்ஸ், உலகளவில் 86வது பெரிய நிறுவனமாகும். இத்தகைய நிறுவனம் தமிழ்நாட்டில் தற்போது முதலீடு செய்துள்ளது.


0 Comments