நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் நிலம் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் பூமி என்று குறிப்பிட்டார். மணிப்பூர் மக்களின் உற்சாகத்திற்கு வணக்கம் செலுத்திய திரு. மோடி, அதிக எண்ணிக்கையில் வந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கட்டுவதற்கான நாடு தழுவிய திட்டத்தில், மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 60,000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
சுமார் ரூ 3,000 கோடி சிறப்புத் தொகுப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூர் மாநிலம் இம்பால்
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இன்று ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்தத் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் என்றும், பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மணிப்பூர் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
21-ம் நூற்றாண்டில், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய மணிப்பூரின் வளர்ச்சி தேவை. மணிப்பூர் எல்லையற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்தது என்று பிரதமர் தெரிவித்தார். வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நிலைத்திருப்பது அனைவரின் கூட்டுக் கடமை என்று அவர் கூறினார்.
மணிப்பூர் இந்தியாவின் வளர்ச்சியின் சக்திவாய்ந்த மையமாக மாறும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்து உரையை நிறைவு செய்தார். மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் குமார் பல்லா உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


0 Comments