Recent Post

6/recent/ticker-posts

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம் / Rs 1,200 crore relief for Uttarakhand disaster

உத்தரகண்ட் பேரிடருக்கு ரூ.1,200 கோடி நிவாரணம் / Rs 1,200 crore relief for Uttarakhand disaster

உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று (செப்.11) வருகை தந்துள்ளார்.

அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel