Recent Post

6/recent/ticker-posts

இந்திய உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி / Indian manufacturer sector growth is high in 15 years

இந்திய உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி / Indian manufacturer sector growth is high in 15 years

உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஆகஸ்டில் 58.6-ஆக இருந்தது. ஆனால், அது செப்டம்பரில் மீண்டும் 57.5ஆக சரிந்தது.

பின்னா் அக்டோபரில் அது மேலும் சரிந்து 55.5ஆக இருந்தது. இது, கடந்த 8 மாதங்கள் காணாத குறைந்தபட்ச பிஎம்ஐ எண்ணாகும். இவ்வாறு தொடா் சரிவைச் சந்தித்து வந்த பிஎம்ஐ, கடந்த நவம்பரில் 56ஆக அதிகரித்தது.

பின்னா் டிசம்பரில் 18 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 54.9ஆக சரிந்தது. ஜனவரியில் 56.5ஆகவும், பிப்ரவரியில் 56.9ஆகவும் அதிகரித்த பிஎம்ஐ, மாா்ச் மாதத்தில் 56.4ஆக இருந்தது.

அதைத் தொடா்ந்து அது கடந்த ஏப்ரலில் 58.2ஆக அதிகரித்து, பின்னா் மே மாதத்தில் 57.6ஆகச் சரிந்தது. பின்னா் ஜூனில் முந்தைய 14 மாதங்கள் காணாத அளவுக்கு 58.4ஆக அதிகரித்த அது, ஜூலையில் 59.1ஆக உயா்ந்தது.

இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 62.9ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச பிஎம்ஐ எண்ணாகும்.

இதன்மூலம், தொடா்ந்து 40ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்திப் பொருள்களுக்கான புதிய தேவைகள் உருவானதும், துறைக்கு சாதகமான சூழல் நிலவியதும் அந்தத் துறைக்கான பிஎம்ஐ 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சியைப் பதிவு செய்ததில் முக்கிய பங்கு வகித்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel