நாட்டின் 15-வது குடியரசு துணைத்தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்றார்.
குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். திரு ராதாகிருஷ்ணன், ஏற்கனவே மகாராஷ்டிர ஆளுநராக இருந்தார்.
திரு சி பி ராதாகிருஷ்ணன் பதவியேற்றபின், ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். சதைவ் அடலில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய்க்கும், தீன்தயாள் உபாத்யாயா மார்கில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவிடத்திலும் கிசான்காட் சென்று முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கிற்கும், அவர் அஞ்சலி செலுத்தினார்.


0 Comments