ஆசிய கோப்பை தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலபரீட்ச்சை நடத்தின. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமாடியது. இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து இலக்கை கடந்தது.
இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் மாற்று இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களான அபிஷேக், குல்தீப், திலக் வர்மா, துபே ஆகியோர் மொத்தமாக 7 விருதுகளை வென்று அசத்தினர்.
அதன்படி, ஆட்டத்தின் நாயகன் விருதை திலக் வர்மா வென்று அசத்தினார். ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய வீரர் விருதை சிவம் துபே வென்றார்.
இதேபோல், தொடரின் நாயகன் விருதை அபிஷேக் சர்மாவும், தொடரின் மிகவும் மதிப்புமிக்க வீரர் விருதை குல்தீப் யாதவும் வென்று அசத்தினர். மேலும், அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான விருதை அபிஷேக் சர்மாவும், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரருக்கான விருதை குல்தீப் யாதவும், அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரருக்கான விருதை மீண்டும் அபிஷேக் சர்மாவும் வென்றனர்.
இறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பை மற்றும் பதக்கங்களை வாங்க இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments