Recent Post

6/recent/ticker-posts

தாதா சாகேப் பால்கே விருது 2025 / Dadasaheb Phalke Award 2025

தாதா சாகேப் பால்கே விருது 2025 / Dadasaheb Phalke Award 2025

தாதா சாகேப் பால்கே விருது தேர்வுக் குழு வழங்கியுள்ள பரிந்துரையின்பேரில், மோகன்லாலுக்கு கௌரவமிக்க தாதா சாகேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்குவதாக அறிவிக்கப்படுகிறது என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று(செப். 20) மாலை தெரிவித்துள்ளது.

65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கடந்த 1986 ஆம் ஆண்டு மோகன்லாலில் திரை வாழ்வில் பொன்னான காலக்கட்டம் எனலாம். அவர் அந்த ஓராண்டில் மட்டும் 34 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

மலையாளத்தில் மட்டுமில்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் 350க்கும் மேற்பட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் திரைக்கதைக்கு உயிரூட்டிய சாதனைக்காரராவார்.

1989 இல் வெளியான கிரீடம், அதன்பின் பரதம் (1991), வனப்பிரஸ்தம் (1999) ஆகியவற்றில் இவர் காட்டிய யதார்த்த நடிப்புத்திறமை இவருக்கு தேசிய விருதுகளையும் பெற்றுத் தர தவறவில்லை.

இந்த நிலையில், மோகன்லாலுக்கு செப். 23-இல் நடைபெறும் 71-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2023-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel