இந்திய கடற்படைக்கும் ஹெலனிக் (கிரீஸ்) கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் பயிற்சியின் முதல் பதிப்பு 2025 செப்டம்பர் 18 அன்று மத்தியதரைக் கடல் ப குதியில் நிறைவடைந்தது.
இது இந்தியாவிற்கும் கிரீஸ் நாட்டிற்கும் இடையிலான வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. இந்தப் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
துறைமுக கட்டம் 2025 செப்டம்பர் 13 முதல் 17 வரை சலாமிஸ் கடற்படைத் தளத்தில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடல்சார் கட்டம் 2025 செப்டம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சியில் இந்தியா சார்பில் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் திரிகண்ட் பங்கேற்றது. துறைமுக கட்டத்தில், இரு கடற்படைகளின் பணியாளர்களும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடல்சார் கட்டத்தில் சிக்கலான கடல்சார் உத்திகள் தொடர்பான பயிற்சிகள் நடைபெற்றன.


0 Comments