12வது ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகார் மாநிலம் ராஜ்கீர் ஸ்டேடியத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு தாமதமாக நடத்தப்பட்டது. இதில் தென்கொரியா அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
இந்த நிலையில் நடப்பு ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்தியா, தென் கொரியா, மலேசியா, சீனா, ஜப்பான், வங்கதேசம், கஜகஸ்தான் மற்றும் சீன தைபே ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
இந்த நிலையில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டி நடந்தது. இந்திய அணி ஆரம்பம் முதலில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தென்கொரியா அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியது.
ஆட்ட நேர இறுதியில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தில்பிரித் ஆட்டநாயகன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணி ஏற்கனவே 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பையை நான்காவது முறையாக வென்றுள்ளது.
அந்த வகையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் தென்கொரியாவுக்கு அடுத்ததாக அதிக முறை ஆசிய கோப்பையை வென்ற 2வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.


0 Comments