இந்தியாவின் குறைக்கடத்தி துறையை வளர்ச்சியடைய செய்யும் நோக்கில் செமிகான் இந்தியா – 2025-ஐ புதுதில்லி யஷோபூமியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
செப்டம்பர் 2 முதல் 4 வரை நடைபெறும் செமிகான் இந்தியா 2025 என்ற 3 நாள் மாநாடு இந்தியாவில் வலுவான நீடித்த செமிகண்டக்டர் சூழல் அமைப்பில் கவனம் செலுத்தும்.
மேலும், வடிவமைப்புடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை எடுத்துரைப்பதோடு புத்தொழில் சூழல் அமைப்பின் வளர்ச்சி, சர்வதேச ஒத்துழைப்பு, இந்தியாவின் செமிகண்டக்டர் துறைக்கான எதிர்காலத் திட்டம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தும்.
இந்த மாநாட்டில் 48 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள், 50 உலகளாவிய தலைவர்கள் உட்பட 150-க்கும் அதிகமான உரையாளர்கள் 350-க்கும் அதிகமான காட்சிப்படுத்துநர் உட்பட 20,750 பேர் பங்கேற்பார்கள்.
இதில், 6 நாடுகளின் வட்டமேசை விவாதங்களும் நடைபெறும். பணியாளர் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான அரங்குகளும் இடம் பெறும்.

0 Comments