சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் முதலாவதாக நடந்த சீனியர் ஆண்களுக்கான 500 மீ பிரிவில் 43.072 வினாடிகளில் ஸ்கேட்டிங் செய்து வெண்கல பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.
இதையடுத்து நடந்த ஆண்களுக்கான 1000 மீ பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஆனந்த குமார், ஒரு நிமிடம் 24 வினாடிகளில் (1:24.924) முதலாவதாக முடித்து தங்கத்தை தட்டிச் சென்றிருக்கிறார்.
இந்த வெற்றியின் மூலம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் சீனியர் அரங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியரும், தமிழருமானார் ஆனந்த்குமார்.
2021ல் நடந்த ஜூனியர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்று ஆனந்த்குமார் சாதனைப் படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments