பீகாரில் ரூ.3,822.31 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை – 139 டபிள்யூ-வின் சாஹேப்கஞ்ச் – அரேராஜ் – பெட்டியா பிரிவில் 78.942 கிலோமீட்டர் தொலைவிற்கு அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் நான்கு வழிச்சாலை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை பசுமை வழித்திட்டம் மாநில தலைநகர் பாட்னா வடக்கு பீகார் மாவட்டங்களான வைசாலி, சரண், சிவான், கோபால்கஞ்ச், முசாஃபர்பூர், கிழக்கு சம்பரன் மற்றும் மேற்கு சம்பரன் மாவடங்களை இந்தியா - நேபாள எல்லைப் பகுதி வரை இணைக்கும் பெட்டியா இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமாகும்.
இத்திட்டம் நீண்ட தூர சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும். வேளாண் மண்டலங்கள், தொழில்துறை பகுதிகள், எல்லைப்பகுதி வர்த்தக வழித்தடங்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் முக்கிய உள்கட்டமைப்பை அணுகுவதையும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கும் இத்திட்டம் உதவிடும்.
இத்திட்டம் 14.22 லட்சம் மனித வேலை நாட்களுக்கான வேலைவாய்ப்பையும் 17.69 லட்சம் மனித வேலை நாட்களுக்கான மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும்.


0 Comments