Recent Post

6/recent/ticker-posts

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார் / Prime Minister Modi launches BSNL 4G services across the country

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார் / Prime Minister Modi launches BSNL 4G services across the country

இந்திய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனம் ஏற்கெனவே 2.2 கோடி வாடிக்கையாளா்களுக்கு 4ஜி தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 100% சதவீத 4ஜி சேவையை வழங்கும்பொருட்டு 29,000-30,000 கிராமங்களில் புதிதாக 97,500 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, சுதேசி 4ஜி சேவையையும் இன்று காணொலி வாயிலாக தொடக்கிவைத்தார்.

இதன்மூலம் உள்நாட்டிலேயே தொலைத்தொடா்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடும் டென்மாா்க், ஸ்வீடன், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் 5-ஆவது நாடாக இந்தியாவும் இணைகிறது.

ஜெய்ப்பூர் வர்த்தக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel