பீகாரில் பக்சார்-பாகல்பூர் அதிவிரைவு வழித்தடத்தின் மொகாமா-முங்கர் பிரிவின் 4 வழி பசுமைச்சாலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்தது.
82.400 கி.மீ. நீளத்திற்கு ரூ.4,447.38 கோடி முதலீட்டுச் செலவில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இப்பிரிவு பாகல்பூருடன் இணைக்கும் மொகாமா, பராஹியா, லக்கிசராய், ஜமல்பூர், முங்கர் போன்ற முக்கியமான பிராந்திய நகரங்கள் வழியாகச் செல்கிறது அல்லது அவற்றுக்கான போக்குவரத்து இணைப்பிற்கு வகைசெய்கிறது.
இந்த நான்கு வழிச்சாலை மூலம் பயண நேரம் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும். அதே நேரத்தில் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பான, விரைவான மற்றும் தடையற்ற போக்குவரத்தை அளிக்கும்.
82.40 கிமீ நீளமுள்ள இந்த திட்டத்தின் மூலம் சுமார் 14.83 லட்சம் மனித நாட்கள் நேரடி வேலைவாய்ப்பையும், 18.46 லட்சம் மனித நாட்கள் மறைமுக வேலைவாய்ப்பையும் உருவாக்கும். இந்த வழித்தடத்தின் அருகே பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் போது கூடுதல் வேலைவாய்ப்புகளும் ஏற்படும்.


0 Comments