Recent Post

6/recent/ticker-posts

பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு - இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின / Singapore PM Wong meets PM Modi - 5 key agreements signed between the two countries

பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்திப்பு - இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின / Singapore PM Wong meets PM Modi - 5 key agreements signed between the two countries

சிங்கப்பூர் அதிபர் லாரன்ஸ் வாங் 3 நாட்கள் பயணமாக டெல்லி வந்துள்ளார். அவருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், நிதித் துறை அமைச்சர் ஜெப்ரி, வர்த்தக துறை அமைச்சர் கான் சியோ ஹுவாங் ஆகியோரும் இந்தியா வந்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சிங்கப்பூர் பிரதமர் வாங் சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று அவர் சந்தித்து பேசினார். அப்போது இந்தியா, சிங்கப்பூர் இடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத கப்பல் போக்குவரத்து, விமான போக்குவரத்து பயிற்சி, செமி கண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் திறன்சார் பயிற்சி, செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம், வங்கி, முதலீடு சார்ந்த தகவல் பரிமாற்றம் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன்பிறகு இரு தலைவர்களும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel