அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார், தொடங்கி வைக்கிறார்.
அப்பகுதியில் பரந்த நீர்மின் திறனைப் பயன்படுத்தி, நிலையான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இட்டாநகரில் ரூ.3,700 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள இரண்டு பெரிய நீர்மின் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
ஹியோ நீர்மின் திட்டம் (240 மெகாவாட்) மற்றும் டாடோ-ஐ நீர்மின் திட்டம் (186 மெகாவாட்) ஆகியவை அருணாச்சலப் பிரதேசத்தின் சியோம் துணைப் படுகைப் பகுதியில் உருவாக்கப்படும்.
தவாங்கில் அதிநவீன மாநாட்டு மையத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். தவாங் எல்லை மாவட்டத்தில் 9,820 அடிக்கு மேல் அமைந்துள்ள இந்த மையம், தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள், கலாச்சார விழாக்கள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கான ஒரு மைல்கல் வசதியாக செயல்படும்.
1,500 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளை நடத்தும் திறன் கொண்ட இந்த மையம், உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் மற்றும் பிராந்தியத்தின் சுற்றுலா மற்றும் கலாச்சார திறனை ஆதரிக்கும்.
இணைப்பு, சுகாதாரம், தீ பாதுகாப்பு, பணிபுரியும் பெண்கள் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவை செய்யும் வகையில், ரூ.1,290 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த முயற்சிகள் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் பிராந்தியத்தில் இணைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments