ஒடிசாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜர்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே மற்றும் உயர்கல்வி போன்ற துறைகளில் ரூ. 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
நாடு முழுவதும் எட்டு ஐஐடிக்களின் விரிவாக்கத்திற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அடுத்த நான்கு ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய மாணவர்கள் படிப்பதற்கான திறன் கொண்டதாக இது அமைய உள்ளது. மேலும் சம்பல்பூர் நகரில் ரூ. 273 கோடி செலவில் கட்டப்பட்ட 5 கி.மீ மேம்பாலத்தையும் அவர் திறந்துவைத்தார்.


0 Comments