Recent Post

6/recent/ticker-posts

62,370 கோடி ரூபாய் மதிப்பிலான இலகு ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்சகான ஒப்பந்தம் கையெழுத்து / Agreement signed for procurement of light combat aircraft worth Rs. 62,370 crore

62,370 கோடி ரூபாய் மதிப்பிலான இலகு ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்சகான ஒப்பந்தம் கையெழுத்து / Agreement signed for procurement of light combat aircraft worth Rs. 62,370 crore


இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திடமிருந்து 97 இலகு ரக போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 

இந்திய விமானப் படைக்காக 62,370 கோடி ரூபாய் மதிப்பிலான 68 எம் கே 1 ஏ ரக போர் விமானங்கள் மற்றும் 29 இரண்டு இருக்கைகள் கொண்ட போர் விமானங்கள் இதில் அடங்கும். 

இதற்கான ஒப்பந்தம் இம்மாதம் 25-ம் தேதி கையெழுத்தானது. இந்த இலகு ரக போர் விமானங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 2027-28-ம் ஆண்டில் தொடங்கும் என்றும் அனைத்து போர் விமானங்களையும் 6 ஆண்டுக் காலத்திற்குள் விமானப்படையிடம் ஒப்படைக்கும் பணி நிறைவடையும் என்று அந்த அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த போர் விமானங்களில் 64 சதவீத பாகங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டது என்றும் 67 கூடுதல் பாகங்களுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட உள்ளதாக அந்த அமைச்சகம் கூறியுள்ளது. 

இந்த போர் விமானங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள், ரேடார் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை தற்சார்பு இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தில் 105-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள்  பங்கேற்பதுடன் ஆண்டு ஒன்றுக்கு 11,750 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel