அசாமின் தர்ராங்கில் சுமார் 6,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அஸ்ஸாமின் வளர்ச்சிப் பயணத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தர்ராங் மக்களுக்கும், அனைத்து அஸ்ஸாம் குடிமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அஸ்ஸாமின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் கூட்டுப் பொறுப்பை வலியுறுத்திய பிரதமர், இதை அடைய, ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியம் என்று கூறினார்.
வடகிழக்கு பகுதியை வளர்ச்சியடைந்த இந்தியாவின் உந்து சக்தியாக அஸ்ஸாம் மாற்றும் என்று கூறி தமது உரையை அவர் நிறைவு செய்தார்.
அஸ்ஸாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


0 Comments