சென்னை ஐஐடியின் கடல்சார் பொறியியல் துறை, 7வது சர்வதேச கடல் பொறியியல் மாநாட்டை (ICOE 2025) செப்டம்பர் 14, 2025 முதல் செப்டம்பர் 18, 2025 வரை நடத்தியது.
7-வது சர்வதேச கடல் பொறியியல் மாநாடு (ICOE 2025), உலகின் முன்னணி ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு முகவர் அமைப்புகளை ஒரே தளத்தில் ஒன்றிணைத்து, கடல் பொறியியல், கடல் தொழில்நுட்பம், கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பெட்ரோலியப் பொறியியல் மற்றும் நீலப் பொருளாதார முயற்சிகள் ஆகியவற்றில் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் கூட்டுறவுகளை வளர்ப்பதற்கான வழிவகை செய்தது.
இந்த ஐந்து நாள் மாநாட்டில் புகழ்பெற்ற நிபுணர்களின் முக்கிய சொற்பொழிவுகள், 100-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்கட்டுரைகளின் விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள், தொழில் கண்காட்சி மற்றும் ஆரம்ப நிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வுகள் ஆகியவை இடம்பெற்றன.
மாநாட்டின் முக்கிய விளைவுகளாக, இந்தியாவின் நீலப் பொருளாதாரத்திற்கான வரைபடத்தை வடிவமைக்கும் கொள்கை, தொழில் பரிந்துரைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துணைக்கடல் அமைப்புகள் மற்றும் மீள்திறன் கொண்ட கடல் கட்டமைப்புகள் குறித்த தொழில்நுட்ப விளக்கங்கள், வலுவான சர்வதேச ஒத்துழைப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் ஈடுபாடுகள், அத்துடன் கடல் தொழில்நுட்பம் மற்றும் நிலையான கடல் மேம்பாட்டிற்கான ஒரு மையமாக இந்தியாவின் உலகளாவிய பார்வை மேம்படுத்தப்படுதல் ஆகியவை அடங்கும்.


0 Comments