சென்னை கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் "உறுப்பு தான தினம் - 2025" உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்தல் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உடலுறுப்பு தானம் செய்த 268 குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர்களின் தியாகத்தை போற்றுவதும், மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக செய்த மருத்துவர்களுக்கும் பாராட்டு நிகழ்வு நடைபெறுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2008 செப்டம்பர் 5ம் தேதி மூளை சாவடைந்தவர்களிடமிருந்து உடலுறுப்பு பெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உருவானது.
2024ம் ஆண்டில் 268 உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இதனை பாராட்டி மத்திய அரசு, உடலுறுப்பு தானத்தில், சிறந்த மாநிலம் என்ற விருது அளித்துள்ளது.
தொடர்ந்து எட்டு முறை தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்திற்கான விருதை பெற்றிருக்கிறது. முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு பிறகு இதுவரை 522 பேர் உடல் உறுப்பு செய்துள்ளார்கள். 23189 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார்கள்.


0 Comments