பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வடிவமைக்கும் உள்நாட்டு அக்னி ஏவுகணைகள், கடந்த 2011 முதல் பயன்பாட்டில் இருக்கின்றது. தொடர்ந்து அடுத்த தலைமுறை ஏவுகணைகளை டிஆர்டிஓ வடிவமைத்து வருகின்றது.
இந்தியாவிடம் உள்ள கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகளில் அக்னி – பிரைம் மிகவும் முக்கியமானது. இந்த வகை ஏவுகணைகள் 5,000 கி.மீ. தொலைவு வரை இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
இந்த நிலையில், 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும் அக்னி – பிரைம் ஏவுகணையை முதல்முறையாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலில் வைத்து, நேற்றிரவு ஏவி சோதனை டிஆர்டிஓ சோதனை செய்துள்ளது.


0 Comments