Recent Post

6/recent/ticker-posts

Ballon d'Or விருது 2025 / Ballon d'Or Award 2025

Ballon d'Or விருது 2025 / Ballon d'Or Award 2025

சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு ஆண்டுதோறும் Ballon d'Or விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஏனெனில், இந்த முறை மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரையிலான வீரர்களின் செயல்பாடு இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரெஞ்சு இதழான 'பிரான்ஸ் ஃபுட்பால்' கடந்த 1956 முதல் இந்த விருதை சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கி வருகிறது. விருதுக்கு பரிந்துரைக்கப்படும் வீரர்களில் இருந்து சிறந்த வீரர் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்.

நடப்பு ஆண்டுக்கான Ballon d'Or விருதை வென்றுள்ளார் பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் முன்கள வீரர் டெம்பெல்லே. அவர் கிளப் அளவில் பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார்.

2024-25 சீசனில் பிஎஸ்ஜி அணிக்காக சிறந்த பங்களிப்பை அவர் வழங்கினார். அது அந்த அணியின் வெற்றிக்கு உதவியது. மகளிருக்கான தங்கப் பந்து விருதை பார்சிலோனாவின் கால்பந்து வீராங்கனை அய்டானா பொன்மட்டி வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இந்த விருதினை வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய சாதனையை பொன்மட்டி படைத்துள்ளார். ஸ்பெயினைச் சேர்ந்த அய்டானா பொன்மட்டி (27 வயது) பார்சிலோன அணியில் விளையாடி வருகிறார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel