CHENNAI WATER APP
சென்னை குடிநீர் செயலி
TAMIL
CHENNAI WATER APP / சென்னை குடிநீர் செயலி: சென்னை குடிநீர் செயலி புகைப்படங்களுடன் கூடிய பதிவு செய்யும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலி மூலம், பொதுமக்களால் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் (GIS) மூலம் தானாகவே கணினி வழியாகப் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும்.
மேலும், புகார் பதிவு செய்த நபருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தியும் அனுப்பப்படும். இச்செயலியின் முக்கிய சிறப்பம்சமாக புகாரின் நிலை குறித்து பொதுமக்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், புகார்களை இணையதளம், மின்னஞ்சல், 8144930308 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் கியூஆர் கோடு மூலமும் பதிவு செய்யலாம். பொதுமக்களின் வசதிக்காக இச்செயலி தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சென்னை குடிநீர் செயலியினை, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ மொபைல் சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இப்புகார்கள் அனைத்தும் சென்னை குடிநீர் செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ENGLISH
CHENNAI WATER APP: The Chennai Water App has been developed with a facility to record complaints with photographs. Through this app, all complaints registered by the public will be automatically captured through a computer using an integrated Geographic Information System (GIS) and sent to the concerned Assistant Engineer via SMS and WhatsApp.
Furthermore, a confirmation SMS will be sent immediately to the person who registered the complaint. The main highlight of this app is that the public can know the status of the complaint instantly.
Furthermore, complaints can be registered through the website, email, WhatsApp number 8144930308, social networking sites like Facebook, X-Dal and QR code. For the convenience of the public, this app has been designed in Tamil and English.
The Chennai Water App can be downloaded on Android and iOS mobile devices. All these complaints will be integrated into the Chennai Water App and action will be taken.
0 Comments