Recent Post

6/recent/ticker-posts

கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவு / Chief Minister M. K. Stalin has ordered the formation of a one-man inquiry commission headed by retired High Court judge Aruna Jagatheesan to investigate the Karur crowding incident

கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

நேற்றிரவு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட, அருணா ஜெகதீசன் ஆணையம் கொடுக்கும் அறிக்கையின்படி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், விசாரணை ஆணையம் விரைவில் விசாரணையைத் தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீதியரசர் அருணா ஜெகதீசன் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார். குறிப்பாக சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில், விஜய் பரப்புரை மேற்கொண்ட இடத்தில் அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel