இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த 2025 ஜூலை 21ஆம் தேதி உடல் நலக் குறைவை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற துணை குடியரசுத் தலைவருக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இந்த உயரிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 12 பேர் தேர்தலை புறக்கணித்த நிலையில் மொத்தமாக்ல 767 வாக்குகள் பதிவாகியிருந்தது.
0 Comments