மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு வர்த்தக, தொழில் மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடியும், ஐசிஐசிஐ வங்கியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
புத்தொழில் நிறுவனங்களுக்கும், புதுமை கண்டுபிடிப்பாளர்களுக்கும் ஆதரவளிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி ஆதரவளிக்கும்.
ஸ்டார்ட் அப் இந்தியா இணைய தளத்தின் மூலம் ஐசிஐசிஐ வங்கி ஆதரவு திட்டங்களை செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கான பயிலரங்குகள் நடத்தப்படுவதுடன் சந்தைப் படுத்துதல் வாய்ப்புகளும் ஏற்படுத்தித் தரப்படும்.


0 Comments