சுகாதார பராமரிப்பில் புதுமைக் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உள்நாட்டு தொழில், வர்த்தக மேம்பாட்டு துறையான டிபிஐஐடி, ஃபைசர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மருந்து துறையில் புதுமை கண்டுபிடிப்பு நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு, நிதி சாராத ஆதரவு என இரண்டையும் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
மருந்து துறையில் புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதி சாராத ஆதரவானது ஆய்வகங்களில் இருந்து சந்தைக்கான பயணத்தை விரைவுபடுத்தும்.
டிபிஐஐடியால் அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு தலா 60 லட்ச ரூபாய் உதவி வழங்கப்படுவதுடன் 18 மாத தொழில் வழிகாட்டுதலும் வழங்கப்படும்.


0 Comments