Recent Post

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுடன் இந்துஜா குழுமம், அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Hinduja Group, AstraZeneca sign MoU with Tamil Nadu government

தமிழ்நாடு அரசுடன் இந்துஜா குழுமம், அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் / Hinduja Group, AstraZeneca sign MoU with Tamil Nadu government

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஐரோப்பா முதலீட்டு சந்திப்புகளின்போது, இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் மின்சார வாகனம், பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தியில் ரூ. 5,000 கோடி முதலீடு செய்திட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது, இதன்மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மேலும், அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்றாவது தொழில் முதலீட்டை அறிவித்துள்ளது.

சென்னையில் உள்ள அதன் உலகளாவிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தை (GITC) ரூ. 176 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவுள்ளது. 

இதன்மூலம், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான முதல்வர் ஸ்டாலினின் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கான பயணத்தால் தமிழ்நாடு பெற்ற மொத்த முதலீடு ரூ. 13,016 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதன்மூலம் 17,813 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பயணத்துக்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ஜெர்மனியிலிருந்து ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. 

இவை விண்வெளி, விரிவான தொழில்நுட்பம், ரயில்வே, ஆட்டோமொடிவ் மற்றும் மின்னணுவியல் உள்ளிட்ட முக்கிய துறைகளை உள்ளடக்கியது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel