பாலஸ்தீன பிரச்னையை அமைதியாக தீர்க்கவும், இரு-நாடு தீர்வை முன்னெடுக்கவும் வலியுறுத்தும் 'நியூயார்க் அறிக்கை' தீர்மானத்தை இந்தியா ஐ.நா பொதுச் சபையில் ஆதரித்தது.
பிரான்ஸ் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் 142 ஆதரவு வாக்குகளுடன் நிறைவேறியது. அமெரிக்கா, இஸ்ரேல், அர்ஜென்டினா, ஹங்கேரி உள்ளிட்ட 10 நாடுகள் இதனை எதிர்த்துள்ளன, மேலும் 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இந்தத் தீர்மானம், ஜூலை மாதம் ஐ.நா. தலைமையகத்தில் பிரான்ஸ்-சவூதி அரேபியா இணைந்து நடத்திய மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.


0 Comments