Recent Post

6/recent/ticker-posts

KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023 / 2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது

KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023
2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது

KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023 / 2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது

TAMIL

KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023 / 2021, 2022, 2023-க்கான கலைமாமணி விருது: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதினை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருதுப் பட்டயம் வழங்கப்படும்.

கே.ஜே.யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது: பாரதியார் விருது (இயல்) முனைவர் ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது (இசை) பத்மபூஷன் டாக்டர் கே.ஜே.யேசுதாஸுக்கும், பாலசரசுவதி விருது (நாட்டியம்) பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாளுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த கலை நிறுவனம் மறும் நாடகக் குழுவுக்கான விருதுகள்: சிறந்த கலை நிறுவனத்துக்கான விருதுக்கு, தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்) தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நாடகக் குழுவுக்கான விருதுக்கு, கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம் ஆகியன தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2021-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் பட்டியல்

  1. க.திருநாவுக்கரசு - எழுத்தாளர்
  2. கவிஞர் நெல்லை ஜெயந்தா - இயற்றமிழ்க் கவிஞர்
  3. எஸ்.சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர் - சமயச் சொற்பொழிவாளர்
  4. பாபநாசம் அசோக் ரமணி - குரலிசை
  5. பா.சற்குருநாதன் - ஓதுவார் திருமுறைதேவார இசை
  6. டி.ஏ.எஸ்.தக்கேசி - தமிழிசைப் பாடகர்
  7. திருச்சூர் சி.நரேந்திரன் - மிருதங்கம்
  8. என்.நரசிம்மன் - கோட்டு வாத்தியம்
  9. கோ.பில்லப்பன் - நாதசுர ஆசிரியர்
  10. திருக்காட்டுப்பள்ளி டி.ஜே.சுப்பிரமணியன் - நாதசுரம்
  11. கல்யாணபுரம் ஜி.சீனிவாசன் - நாதசுரம்
  12. திருவல்லிக்கேணி கே.சேகர் - தவில்
  13. நாட்டியம் வழுவூர் எஸ்.பழனியப்பன் - பரதநாட்டிய ஆசிரியர்
  14. பிரியா கார்த்திகேயன் - பரதநாட்டியம்
  15. பூச்சி எஸ்.முருகன் - நாடக நடிகர்
  16. காரைக்குடி நாராயணன் - நாடக இயக்குநர்
  17. என்.ஏ.அலெக்ஸ் - ஆர்மோனியம்
  18. எஸ்.ஜே.சூர்யா - திரைப்பட நடிகர்
  19. சாய் பல்லவி - திரைப்பட நடிகை
  20. லிங்குசாமி - திரைப்பட இயக்குநர்
  21. ஜே.கே. (எ) எம்.ஜெயகுமார் - திரைப்பட அரங்க அமைப்பாளர்
  22. சூப்பர் சுப்பராயன் - திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்
  23. பி.கே.கமலேஷ் - சின்னத்திரை நடிகர்
  24. எம்.பி.விசுவநாதன் - இசை நாடக நடிகர்
  25. வீர சங்கர் - கிராமியப் பாடகர்
  26. நா.காமாட்சி - பொய்க்கால் குதிரை ஆட்டம்
  27. எம்.முனுசாமி - பெரியமேளம்
  28. பி.மருங்கன் - நையாண்டிமேள நாதஸ்வரம்
  29. கே.கே.சி.பாலு - வள்ளி ஒயில் கும்மி
  30. வே.ஜீவானந்தன் - ஓவியர்

2022-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்

  1. சாந்தகுமாரி சிவகடாட்சம் - எழுத்தாளர்
  2. முனைவர் தி.மு.அப்துல்காதர் - இலக்கியப் பேச்சாளர்
  3. சு.முத்துகணேசன் - சமயச் சொற்பொழிவாளர்
  4. ஜெயஸ்ரீ வைத்தியநாதன் - குரலிசை
  5. சாரதா ராகவ் - குரலிசை
  6. பகலா ராமதாஸ் - வயலின்
  7. நெய்வேலி ஆர்.நாராயணன் - மிருதங்கம்
  8. செம்பனார்கோயில் எஸ்.ஜி.ஆர்.எஸ். மோகன்தாஸ் நாதசுரம்
  9. சித்துக்காடு டி.ஜி.முருகவேல் - நாதசுரம்
  10. திருக்கடையூர் டி.ஜி.பாபு - தவில்
  11. சுசித்ரா பாலசுப்பிரமணியன் - கதா காலட்சேபம்
  12. அமுதா தண்டபாணி - பரதநாட்டிய ஆசிரியர்
  13. வி.சுப்பிரமணிய பாகவதர் - பாகவத மேளா
  14. சுவாமிமலை கே. சுரேஷ் - பரதநாட்டியக் குரலிசை
  15. பொன் சுந்தரேசன் - நாடக நடிகர்
  16. கவிஞர் இரா. நன்மாறன் - நாடக இயக்குநர்
  17. சோலை ராஜேந்திரன் - நாடகத் தயாரிப்பாளர்
  18. விக்ரம் பிரபு - திரைப்பட நடிகர்
  19. ஜெயா வி.சி.குகநாதன் - திரைப்பட நடிகை
  20. விவேகா - திரைப்பட பாடலாசிரியர்
  21. டைமண்ட் பாபு - திரைப்பட செய்தித் தொடர்பாளர்
  22. டி.லட்சுமிகாந்தன் - திரைப்பட புகைப்படக் கலைஞர்
  23. மெட்டிஒலி காயத்ரி - சின்னத்திரை நடிகை
  24. என்.சத்தியராஜ் - இசை நாடக நடிகர்
  25. ந.ரஞ்சிதவேல் - பொம்மு தேவராட்டம்
  26. மு. கலைவாணன் - பொம்மலாட்டம்
  27. எம்.எஸ்.சி. ராதாரவி - தப்பாட்டம்
  28. கே.பாலு - நையாண்டிமேள நாதஸ்வரம்
  29. ஆர்.சாமிநாதன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
  30. கே.லோகநாதன் - ஓவியர்

2023-க்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்

  1. கவிஞர் கே. ஜீவபாரதி - இயற்றமிழ்க் கவிஞர்
  2. ஆர். காசியப் மகேஷ் - குரலிசை
  3. ஹேமலதாமணி - வீணை
  4. வே. பிரபு - கிளாரினெட்
  5. பி. பி. ரவிச்சந்திரன் - நாதசுரம்
  6. ஞான நடராஜன் - நாதசுரம்
  7. எம்.எஸ்.ஆர்.பரமேஸ்வரன் - நாதசுரம்
  8. ராமஜெயம் பாரதி - தவில்
  9. பா.ராதாகிருஷ்ணன் - தவில்
  10. க.தனசுந்தரி - பரதநாட்டிய ஆசிரியர்
  11. வி.ஜெயப்பிரியா - குச்சுப்பிடி நாட்டியம்
  12. கே.ஹரிபிரசாத் - பரதநாட்டியக் குரலிசை
  13. என். ஜோதிகண்ணன் - பழம்பெரும் நாடக நடிகர்
  14. வானதிகதிர் (எ) பெ.கதிர்வேல் - நாடக நடிகர்
  15. வி.கே.தேவநாதன் - விழிப்புணர்வு நாடக நடிகர்
  16. கே.மணிகண்டன் - திரைப்பட நடிகர்
  17. எம்.ஜார்ஜ் மரியான் - திரைப்பட குணச்சித்திர நடிகர்
  18. அனிருத் - திரைப்பட இசையமைப்பாளர்
  19. ஸ்வேதா மோகன் - திரைப்பட பின்னணிப் பாடகி
  20. சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார் - திரைப்பட நடன இயக்குநர்
  21. நிகில் முருகன் - திரைப்பட செய்தித் தொடர்பாளர்
  22. என்.பி. உமாசங்கர்பாபு - சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  23. அழகன் தமிழ்மணி - சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
  24. ஏ.ஆர்.ஏ. கண்ணன் - இசை நாடக நடிகர்
  25. ஆர்.எம். தமிழ்ச்செல்வி - இசை நாடக நடிகை
  26. கே.எம்.ராமநாதன் - தெருக்கூத்து
  27. டி.ஜெகநாதன் - வில்லுப்பாட்டு
  28. சி.மகாமணி - நையாண்டிமேள தவில்
  29. ஆ.சந்திரபுஷ்பம் - கிராமியப் பாடல் ஆய்வாளர்
  30. சு.தீனதயாளன் - சிற்பி

ENGLISH

KALAIMAAMANI AWARD 2021, 2022 & 2023: The Tamil Nadu Government has announced the Kalaimamani Award to be presented by the Tamil Nadu Arts, Music and Drama Council.

This award is given in recognition of the contribution of artists who have served the arts, music and drama for many years. Accordingly, the Tamil Nadu Government has announced the Kalaimamani Award for three years, 2021, 2022 and 2023.

It has also been reported that Chief Minister M.K. Stalin will present these awards at a function to be held at the Kalaivanar Arangam in Chennai next month. The winners of this All India Award will be given a cheque for a prize money of one lakh rupees and a gold medal weighing 3 sovereigns. The artists who receive the Kalaimamani Award will be given a gold medal weighing 3 sovereigns and an award certificate.

MS Subbulakshmi Award for K.J. Yesudas: Bharathiyar Award (Science) to Dr. N. Murugesa Pandian, MS Subbulakshmi Award (Music) Padma Bhushan to Dr. K.J. Yesudas, and Balasarasuwathi Award (Drama) to Padma Shri Muthukannammal have been announced.

Awards for Best Art Institution and Drama Group: Tamil Music Society, Chennai (Raja Annamalai Mandram) has been selected for the Best Art Institution award. Kalaimamani MR Muthusamy Memorial Drama Group, Palamedu, Madurai District has been selected for the Best Drama Group award.

List of artists who will receive the Kalaimamani Award for 2021

  1. K. Thirunavukkarasu - Writer
  2. Poet Nellai Jayantha - Lyrical poet
  3. S. Chandrasekhar (A) Thangampattar - Religious orator
  4. Papanasam Ashok Ramani - Vocal music
  5. P. Satgurunathan - Orator Thirumuraidevar music
  6. D.A.S. Thakkesi - Tamil music singer
  7. Thrissur C. Narendran - Mridangam
  8. N. Narasimhan - Kottu Vathyam
  9. Go. Billappan - Nathasura teacher
  10. Thirukattupalli D.J. Subramanian - Nathasuram
  11. Kalyanapuram G. Srinivasan - Nathasuram
  12. Thiruvallikeni K. Sekar - Thavil
  13. Natyam Vazhuvur S. Palaniappan - Bharatanatyam teacher
  14. Priya Karthikeyan - Bharatanatyam
  15. Poochie S. Murugan - Theatre actor
  16. Karaikudi Narayanan - Theatre director
  17. N.A. Alex - Harmonium
  18. S.J. Surya - Film actor
  19. Sai Pallavi - Film actress
  20. Lingusamy - Film director
  21. J.K. (A) M. Jayakumar - Film Stage Manager
  22. Super Subbarayan - Film Fight Coach
  23. P.K. Kamlesh - Small Screen Actor
  24. M.P. Viswanathan - Musical Theatre Actor
  25. Veera Shankar - Folk Singer
  26. N. Kamatchi - Poikkal Kudhira Aottam
  27. M. Munusamy - Periyamela
  28. P. Marungan - Naiyandi Mela Nathaswaram
  29. K.K.C. Balu - Valli Oil Gummi
  30. V. Jeevanandan - Painter

Artists to receive Kalaimamani Award for 2022

  1. Shanthakumari Sivakataksham - Writer
  2. Dr. D.M. Abdulkadhar - Literary Speaker
  3. Su. Muthuganesan - Religious Orator
  4. Jayashree Vaidyanathan - Vocalist
  5. Saratha Raghav - Vocals
  6. Pakala Ramadoss - Violin
  7. Neyveli R. Narayanan - Mridangam
  8. Sembanarkoil S.G.R.S. Mohandas Nathasuram
  9. Sidhukkadu D.G. Murugavel - Nathasuram
  10. Thirukadaiyur D.G. Babu - Thavil
  11. Suchithra Balasubramanian - Katha Kalatsepam
  12. Amudha Dandapani - Bharatanatyam teacher
  13. V. Subramania Bhagavathar - Bhagavat Mela
  14. Swamimalai K. Suresh - Bharatanatyam Vocals
  15. Pon Sundaresan - Drama Actor
  16. Poet I. Nanmaran - Theatre Director
  17. Solai Rajendran - Theatre Producer
  18. Vikram Prabhu - Film Actor
  19. Jaya V.C. Kuganathan - Film Actress
  20. Viveka - Film Lyricist
  21. Diamond Babu - Film Spokesperson
  22. T. Lakshmikanthan - Film Photographer
  23. Mettioli Gayathri - Film Actress
  24. N. Sathyaraj - Musical Theatre Actor
  25. N. Ranjithavel - Pommu Thevarattam
  26. M. Kalaivanan - Puppet Theatre
  27. M.Sc. Radharavi - Tappattam
  28. K. Balu - Nayantimal Nathswaram
  29. R. Swaminathan - Cultural Arts Promoter
  30. K. Lokanathan - Painter

Artists to receive Kalaimamani Award for 2023

  1. Poet K. Jeevabharathi - Lyrical Poet
  2. R. Kashyap Mahesh - Vocals
  3. Hemalathamani - Veena
  4. V. Prabhu - Clarinet
  5. P. P. Ravichandran - Nathasuram
  6. Gnana Natarajan - Nathasuram
  7. M.S.R. Parameswaran - Nathasuram
  8. Ramajayam Bharathi - Thavil
  9. P. Radhakrishnan - Thavil
  10. K. Thanasundari - Bharatanatyam teacher
  11. V. Jayapriya - Kuchupitiya Natyam
  12. K. Hariprasad - Bharatanatyam vocals
  13. N. Jyothikannan - Veteran theatre actor
  14. Vanathikathi (A) P. Kathirvel - Theatre actor
  15. V.K. Devanathan - Awareness theatre actor
  16. K. Manikandan - Film actor
  17. M. George Marian - Film character actor
  18. Anirudh - Film music composer
  19. Swetha Mohan - Film playback singer
  20. Sandy (A) A. Santhosh Kumar - Film Choreographer
  21. Nikhil Murugan - Film Spokesperson
  22. N.P. Umashankar Babu - Small Screen Program Host
  23. Alagan Tamilmani - Small Screen Program Producer
  24. A.R.A. Kannan - Musical Theater Actor
  25. R.M. Tamilselvi - Musical Theater Actress
  26. K.M. Ramanathan - Terukkuthu
  27. T. Jaganathan - Villuppattu
  28. C. Mahamani - Nayantimela Thavil
  29. A. Chandrapushpam - Folk Song Researcher
  30. Su. Deenadayalan - Sculptor

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel