Recent Post

6/recent/ticker-posts

குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு / Maharashtra Governor given additional charge to Gujarat Governor

குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர மாநில ஆளுநர் கூடுதல் பொறுப்பு / Maharashtra Governor given additional charge to Gujarat Governor

குடியரசு துணைத் தலைவராகத் தேர்வானதால், சி.பி. ராதாகிருஷ்ணன் தனது மகாராஷ்டிர ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து குஜராத் ஆளுநருக்கு மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், மகாராஷ்டிர ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆச்சார்ய தேவவிரத் முதலில் குஜராத் மாநில ஆளுநராகவும் பின்னர் ஹிமாசலப் பிரதேச ஆளுநராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel