தமிழகத்தில் தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளங்களை நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சிப்காட் நிர்வாகமும் மற்றும் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகமும் சில வாரங்களுக்கு முன்பு கையொப்பமிட்டன.
“கொச்சி ஷிப்யார்ட் நிறுவனம், உலக அளவிலான வணிகக் கப்பல் கட்டும் தளத்தை நிறுவ ரூ.15,000 கோடியை முதலீடு செய்யும். முதல்கட்டமாக 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் (4,000 நேரடி மற்றும் 6,000 மறைமுக) உருவாக்கப்படும்.
மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமானது, ரூ.15,000 கோடி முதலீட்டில் மற்றொரு உலகளாவிய வணிகக் கப்பல் கட்டும் தளத்தை அமைக்கிறது. இது 45,000-க்கும் மேற்பட்டோருக்கு (5,000 நேரடி மற்றும் 40,000 மறைமுக) வேலைவாய்ப்பை உருவாக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய நகர்வாக இருக்கும்.
இந்த இரண்டு மிகப்பெரிய திட்டங்களும் சேர்ந்து, கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக தமிழகம் உருவெடுக்க வழிவகுக்கும்.
%20with%20the%20Government%20of%20Tamil%20Nadu,%20Kochi%20Shipyard%20and%20Mazagon%20Dock%20Shipbuilders.jpg)

0 Comments