இந்திய விமானப்படையில் முக்கிய, பல போர்களின் நாயகனாக விளங்கிய MiG-21 ரக போர் விமானங்கள், 62 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஓய்வு பெற்றன.
நாட்டின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானம் என்ற பெருமைக்குரிய இந்த விமானங்களுக்கு, சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக விமானங்கள் இணைந்து கண்கவர் விமான அணிவகுப்பு நடத்தப்பட்டது. 2019 வான்வழித் தாக்குதலை நினைவுகூரும் வகையில், MiG-21 மற்றும் ஜாகுவார் விமானங்களுக்கு இடையே ஒரு மாதிரி வான்வழி சண்டையும் நடத்தப்பட்டது.


0 Comments