நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில், அந்நாட்டு அதிபர் ராம் சந்திர பௌடேலும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
போராட்டக்காரர்களின் வலியுறுத்தல் காரணமாக நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், அதிபரும் ராஜினாமா செய்துள்ளார்.
போராட்டத்தைத் தடுக்கவே, அந்நாட்டு அரசு சமூக ஊடகங்களை தடை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை தொடங்கி தற்போது வரை தொடர்ந்து நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் காரணமாக இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். அந்நாட்டின் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களை கட்டுப்படுத்த முடியவில்லை.


0 Comments