Recent Post

6/recent/ticker-posts

பீகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi launches women employment scheme in Bihar

பீகாரில் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் / PM Modi launches women employment scheme in Bihar

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் "மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் மூலம் 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்பட உள்ளது.

இந்த தொகையை சுயதொழில் தொடங்கவும், அல்லது பிற வாழ்வாதார தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தொழில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி, சந்தை வழிகாட்டுதல், அடுத்த கட்டத்தில் ரூ.2 லட்சம் வரை மானிய உதவியும் வழங்கப்படும்.

ரூ.7,500 கோடி செலவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம், பீகார் பெண்களின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த நிதியை, விவசாயம், கால்நடை வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல், நெசவு, பிற சிறு தொழில்கள் உட்பட தாங்கள் விரும்பும் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றும் மாநில அரசின் முயற்சியின் ஒரு அங்கமாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel