பிரதமர் நரேந்திர மோடி மத்தியப்பிரதேசத்தின் தாரில் இன்று வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அப்போது உரையாற்றிய பிரதமர், தார் போஜ்சலாவின் மரியாதைக்குரிய அன்னை வக்தேவியின் காலடியில் வணங்குவதாக கூறினார்.
படைப்பின் தெய்வமான விஸ்வகர்மாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுவதைக் குறிப்பிட்ட திரு மோடி, விஸ்வகர்மாவுக்கு வணக்கம் செலுத்தினார்.
சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
மக்கள் தாங்கள் வாங்கும் அல்லது விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான ஒரு கருவியாக சுதேசியைப் பயன்படுத்தியதை நினைவு கூர்ந்த அவர், தற்போது வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளமாக இது மாற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.


0 Comments