Recent Post

6/recent/ticker-posts

REPORT ON CANCER GROWTH IN INDIA / இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆய்வு

REPORT ON CANCER GROWTH IN INDIA
இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆய்வு

REPORT ON CANCER GROWTH IN INDIA / இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆய்வு

TAMIL

REPORT ON CANCER GROWTH IN INDIA / இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு குறித்த ஆய்வு: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தி லான்செட் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு, 1990-லிருந்து 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 1990-ல் ஒரு லட்சம் பேரில் 84.8 பேருக்கு இருந்த புற்றுநோய் பாதிப்பு, 2023-ல் 107.2 பேருக்கு அதிகரித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைகள் இருந்தபோதிலும், இறப்புகள் 21 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 33 ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவில் புற்றுநோய் பாதிப்பும் இறப்பும் கணிசமாகக் குறைந்துள்ளதாக தி லான்செட் ஆய்வு கூறுகிறது.

இதற்கு காரணமாக - இந்த இரு நாடுகளிலும் புகையிலை கட்டுப்பாடு, உலகளாவிய தடுப்பூசி, ஒருங்கமைக்கப்பட்ட பரிசோதனை என்று தில்லியைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் டாக்டர் அபிஷேக் சங்கர் கூறுகிறார்.

அதிகளவிலான புகையிலைப் பயன்பாடு, உடற்பருமன், தொற்றுகள் மற்றும் முன்கூட்டியே கண்டறியும் சோதனைகளில் தாமதம் போன்றவற்றில் இந்தியா மோசமான நிலையில் உள்ளதாகவும் அபிஷேக் தெரிவித்தார்.

எச்பிவி மற்றும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி, மேமோகிராஃபி, நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை, கொலோனோஸ்கோபி பரிசோதனை, உரிய நேரத்தில் உரிய சிகிச்சை போன்றவை போதுமானதாக இல்லை. புற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கும் உத்திகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.

உலகளவில் குறிப்பிடத்தக்க நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. மேலும் வரும் ஆண்டுகளிலும், குறைந்த வளங்களைக் கொண்ட நாடுகளில் புற்றுநோயின் தாக்கம் எப்படி இருக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.

புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தேவை என்றபோதிலும், கட்டுப்பாட்டுக் கொள்கைகள் மற்றும் செயல்படுத்துதல் குறித்து உலகளாவிய சுகாதாரத்தில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றும், மேலும் இவற்றை சமாளிக்க பல அமைப்புகளிடம் போதுமான நிதி இல்லை என்றும் வாஷிங்டன் பல்கலை கூறுகிறது.

1990 முதல் 2023 இடையிலான காலகட்டத்தில், சீனாவில் புற்றுநோய் பாதிப்பு 19 சதவிகிதமும், அமெரிக்காவில் 20 சதவிகிதமும் குறைந்துள்ளது.

மேலும், புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளும் குறைந்துள்ளன. சீனாவில் புற்றுநோய் இறப்புகள் 43 சதவிகிதமும், அமெரிக்காவில் 33 சதவிகிதமும் குறைந்துள்ளன.

2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட 1.04 கோடி இறப்புகளில் 43 லட்சம் இறப்புகளில் நடவடிக்கை எடுத்திருக்கும் வாய்ப்புகள் இருந்ததாகவும் பல்கலை கூறியது.

2023-ல் புற்றுநோய் இறப்புகளால் அனைத்து நாடுகளின் வருமான நிலைகளும் பாதித்தன. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைத்தவிர, அனைத்து நாடுகளின் வருமான நிலைகளில் புகையிலைதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் பாதுகாப்பற்ற உடலுறவுதான் முன்னணி ஆபத்துக் காரணியாக இருந்தது.

இந்தியாவில் பெரும்பாலான புற்றுநோய்கள், தாமதமாகத்தான் கண்டறியப்படுகின்றன. இதனால், முன்கூட்டிய கணிப்பு மோசமாக உள்ளது.

ENGLISH

REPORT ON CANCER GROWTH IN INDIA: The Lancet study has reported that cancer incidence in India has increased by 26 percent since 1990. The cancer incidence in India has increased from 84.8 per lakh population in 1990 to 107.2 per lakh population in 2023.

Despite cancer treatments during this period, deaths have increased by 21 percent. However, the Lancet study says that cancer incidence and mortality have decreased significantly in the US and China in the past 33 years.

The reason for this is tobacco control, universal vaccination, and coordinated testing in these two countries, says Delhi-based cancer expert Dr. Abhishek Shankar. Abhishek also said that India is in a bad position in terms of high tobacco use, obesity, infections, and delays in early detection tests.

HPV and hepatitis B vaccination, mammography, lung cancer screening, colonoscopy, and timely and appropriate treatment are not enough. India needs to strengthen cancer prevention strategies.

Cancer remains a significant disease worldwide. And in the coming years, the University of Washington's Institute for Health Metrics and Evaluation is assessing how cancer will affect low-resource countries.

Despite the need for cancer prevention measures, control policies and implementation are not a priority in global health, and many organizations lack the resources to address them, the University of Washington says.

Between 1990 and 2023, cancer incidence fell by 19 percent in China and 20 percent in the United States. Cancer deaths have also fallen. Cancer deaths in China fell by 43 percent and in the United States by 33 percent.

The university said that of the estimated 10.4 million deaths in 2023, 4.3 million could have been prevented by action, the university said. Cancer deaths in 2023 were affected by income levels in all countries. 

Tobacco was the leading risk factor in all income levels, except in low-income countries. Unprotected sex was the leading risk factor in low-income countries. Most cancers in India are diagnosed late, resulting in poor prognosis.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel