REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025
நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கை 2025
TAMIL
REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025 / நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகள் குறித்த அறிக்கை 2025: நாட்டில் இணையதள வசதி உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை 63.5%-ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள 2024-25க்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-24-ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 53.9%-ஆக இருந்தது.
இதேபோல் 2023-24-ல் கணினி வசதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்க 57.2%-ஆக இருந்த நிலையில் 2024-25-ல் 64.7%-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
2024-25-ல் மின்சாரம், குடிநீர், மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனியான கழிப்பறைகள், போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் விளையாட்டுத்திடல், நூலகம் ஆகிய உள்கட்டமைப்பு சுமார் 90% அளவுக்கு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை விகிதம் 2023-24-ல் 48.1%-ஆக இருந்தது. இது 2024-25-ல் 48.3%-ஆக அதிகரித்துள்ளது. ஆசிரியைகள் விகிதம் 2023-24-ல் 53.3%-ஆகவும் 2024-25-ல் 54.2%-ஆகவும் இருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளிகளில் 2023-24-ல் 3.7%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 2.3%-ஆக குறைந்துள்ளது. நடுநிலைப்பள்ளியில் 2023-24ல் 5.2%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 3.5%-ஆக குறைந்துள்ளது.
உயர்நிலைப் பள்ளியில் 2023-24-ல் 10.9%-ஆக இருந்த மாணவர்களின் இடைநிற்றல் 2024-25-ல் 8.2%-ஆக குறைந்துள்ளது என்றும் மத்திய கல்வி அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
REPORT ON SCHOOL INTERNET FACILITIES IN INDIA 2025: The number of schools with internet facilities in the country has increased to 63.5%, according to the Integrated District Information System report for 2024-25 released by the Union Education Ministry. This number was 53.9% in 2023-24.
Similarly, the number of schools with computer facilities has increased to 64.7% in 2024-25, from 57.2% in 2023-24, the report says. In 2024-25, basic infrastructure such as electricity, drinking water, separate toilets for girls and boys are more than 90%, and infrastructure such as sports facilities and libraries is about 90%.
The female enrolment ratio in schools was 48.1% in 2023-24. This increased to 48.3% in 2024-25. The teacher-teacher ratio was 53.3% in 2023-24 and 54.2% in 2024-25, the report said.
Student dropout in primary schools has decreased from 3.7% in 2023-24 to 2.3% in 2024-25. Student dropout in middle school has decreased from 5.2% in 2023-24 to 3.5% in 2024-25.
Student dropout in high school has decreased from 10.9% in 2023-24 to 8.2% in 2024-25, the Union Education Ministry report said.
0 Comments