Recent Post

6/recent/ticker-posts

திறன் கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Department of Science and Industrial Research's project on Skill Development and Human Resource Development

2021-22 முதல் 2025-26 வரையிலான 15-வது நிதிக்குழுவின் சுழற்சிக்காலத்தில் ரூ. 2277.397 கோடி ஒதுக்கீட்டுடன் திறன் கட்டமைப்பு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த அறிவியல், தொழில் ஆராய்ச்சித்துறை திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய சோதனைக் கூடங்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.

இந்த முன்முயற்சி பல்கலைக்கழகங்கள், தொழில்துறை தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி செய்ய விரும்பும் ஆர்வமுள்ள இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவான தளத்தை வழங்கும். 

பிரபல விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களால் வழிகாட்டப்படும் இந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம், கணித அறிவியல் ஆகியவற்றை வளர்ப்பதாக இருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel