பாலின பிறப்பு விகிதத்தில் நேர்மறையான இலக்கை நாடு எட்டியுள்ளது. 2023ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மாதிரிப் பதிவு முறைப்படி, பாலின விகிதம் 18 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
அதாவது, 2016-18 காலகட்டத்தில் 1,000 ஆண்களுக்கு 819 பெண்கள் மட்டுமே இருந்த நிலையில், 2021-23 ஆண்டில் 917 பெண்களாக அதிகரித்துள்ளது.
2021 - 23 கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் உள்ளனர். கருவின் பாலினத்தை முன்கூட்டியே அறிய தடை விதிக்கும் சட்டத்தை வலுப்படுத்தியதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது.
ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பிறப்பானது வலுவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் அதிக மீள்தன்மையுடையதாகவும் உள்ளது. அதாவது, இயற்கையாகவே ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகள் உயிர்வாழ்தல் அதிக சாத்தியத்தைக் கொண்டது.

0 Comments