தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ்நாட்டின் புத்தொழில் சூழலை உலகத்தரத்தில் மேம்படுத்தும் முயற்சியாகவும், தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு பன்னாட்டு இணைப்புகளை ஏற்படுத்தும் வகையில் உலக புத்தொழில் மாநாடு கோவை பீளமேடு கொடிசியா அரங்கில் துவங்கியது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று இரண்டாவது நாளாக இம்மாநாடு நடந்து, மாலையுடன் நிறைவடைந்தது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இம்மாநாட்டில், பிரான்சின் லிங்க் இன்னோவேசன்ஸ், பிலிப்பைன்ஸின் டெக் ஷேக், ஜெர்மனியின் ஆசிய பெர்லின் போரும், தென்கொரியாவின் யூனிகார்ன் இன்குபேட்டர், கனடாவின் ஆர்.எக்ஸ்.என். ஹப், ப்ளு ஓசன் மற்றும் லோவ்ஸ் இந்தியா உள்ளிட்ட 23 பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகின.
மேலும், மாநாட்டில் கலந்து கொண்ட 250க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் ரூ.130 கோடிக்கும் மேற்பட்ட முதலீடுகள் உறுதிசெய்யப்பட்டன.


0 Comments