2025-26-ம் நிதியாண்டில் மேற்கு வங்கம் மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் கீழ் அடிப்படை மானியங்களின் முதல் தவணையாக ரூ.680.71 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
அம்மாநிலத்தின் தகுதியுடைய 3224 கிராமப் பஞ்சாயத்துகள், 335 வட்டார பஞ்சாயத்துகள் மற்றும் 21 மாவட்ட அமைப்புகளுக்கு இத்தொகை 2025, அக்டோபர் 06 அன்று விடுவிக்கப்பட்டது.
கடந்த 2024-25-ம் நிதியாண்டு மற்றும் நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் மொத்தம் ரூ.4181.23 கோடி பரிந்துரைக்கப்பட்டதில் அடிப்படை மானியமாக ரூ.2082.13 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.


0 Comments