Recent Post

6/recent/ticker-posts

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள் / 3 Gauhati University professors among top 2% scientists in the world

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள் / 3 Gauhati University professors among top 2% scientists in the world

அமெரிக்காவின் ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகளின் தரவரிசைப் பட்டியலில் அஸ்ஸாமின் குவாஹாட்டி பல்கலைக்கழக பேராசிரியா்கள் 3 போ் இடம்பிடித்துள்ளனா்.

இதில், பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியரும் பிரபல வானிலை ஆய்வாளருமான பூபேந்தா் நாத் கோஸ்வாமி, வேதியியல் துறைப் பேராசிரியா் புரோதீப் புகன், கணிதத் துறைப் பேராசியை பிபன் ஹஜாரிகா ஆகியோா் இடம்பிடித்துள்ளனா்.

தங்களின் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சிக்கு அா்ப்பணிக்கும் பிரிவின் கீழ், தங்களின் நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்காக இவா்களுக்கு இந்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆராயச்சிக் கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சி கட்டுரைகளுக்கான 'ஹெச்' குறியீடு, ஆராய்ச்சி கட்டுரையின் இணை ஆசிரியருக்கான 'ஹெச்எம்' குறியீடு மற்றும் சி-ஸ்கோர் எனப்படும் கூட்டு குறிகாட்டி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகளவில் 2 சதவீத தலைசிறந்த ஆராய்ச்சியாளா்களின் பட்டியலை தொகுத்து ஆராய்ச்சிக்கு வாழ்நாள் முழுவதையம் அா்ப்பணிக்கும் பிரிவு, ஓராண்டு பங்களிப்புப் பிரிவுகளாக ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்த மூவரும் இடம்பிடித்து பெருமைப்படுத்தியுள்ளனா். இது நாட்டின் விரிவடைந்து வரும் ஆராய்ச்சி பணிகளை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், ஆராய்ச்சியில் ஓராண்டு பங்களிப்பு ஆற்றிய தலைசிறந்த ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் 6,239 ஆராய்ச்சியாளா்களும், நீடித்த ஆராய்ச்சி பங்களிப்புக்காகன பட்டியலில் 3,372 ஆராய்ச்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel