Recent Post

6/recent/ticker-posts

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 2025 / Funding sharing of central tax revenue to states 2025


மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 2025 / Funding sharing of central tax revenue to states 2025

மத்திய அரசு தமது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நிதி பகிர்வு மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசுகள் அரசு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதிக்குஇது பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிதியை மாநிலங்கள் தமது வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10 ஆம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் விடுவிப்பு. ம.பி., ரூ.7,676 கோடியும் மகாராஷ்டிரா ரூ.6,418 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக மத்திய வரிப் பகிர்வில் இருந்து மாநிலங்களுக்கு ரூ. 1,01,603 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக விடுவிக்கப்பட்டுள்ள தொகை வருமாறு

  • ஆந்திரா - ரூ. 4,112 கோடி
  • அருணாசல பிரதேசம் - ரூ. 1,785 கோடி
  • அசாம் - ரூ. 3178 கோடி
  • பீகார் - ரூ. 10219 கோடி
  • சத்தீஸ்கர் - ரூ. 3462 கோடி
  • கோவா - ரூ. 392 கோடி, 
  • குஜராத் - ரூ. 3534 கோடி, 
  • ஹரியானா - ரூ. 11111 கோடி, 
  • இமாச்சல பிரதேசம் - ரூ. 843 கோடி, 
  • ஜார்க்கண்ட் - ரூ. 3360 கோடி, 
  • கர்நாடகா - ரூ. 3705 கோடி, 
  • கேரளா - ரூ. 1956 கோடி, 
  • மத்திய பிரதேசம் - ரூ. 7976 கோடி, 
  • மகாராஷ்டிரா - ரூ. 6418 கோடி, 
  • மணிப்பூர் ரூ. 727 கோடி, 
  • மேகாலயா - ரூ. 779 கோடி, 
  • மிசோரம் - ரூ. 508 கோடி,
  • நாகலாந்து - ரூ. 578 கோடி, 
  • ஒடிசா - ரூ. 4601 கோடி, 
  • பஞ்சாப் - ரூ. 1836 கோடி, 
  • ராஜஸ்தான் - ரூ. 6123 கோடி,
  • சிக்கிம் - ரூ. 394 கோடி, 
  • தமிழ்நாடு - ரூ. 4144 கோடி, 
  • தெலங்கானா - ரூ. 2136 கோடி, 
  • திரிபுரா - ரூ. 719 கோடி, 
  • உத்தரப் பிரதேசம் - ரூ. 18,227 கோடி, 
  • உத்தரகாண்ட் - ரூ. 1136 கோடி, 
  • மேற்கு வங்கம் - ரூ. 7644 கோடி

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel