தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கிராம மக்களிடம் உரையாற்றினார்.
அதிலும், தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய அளவில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளையும் இணைய வசதி மூலமாக இணைத்து, கிராம சபைக் கூட்டத்தை நடத்துவது இதுதான் முதல்முறை.
கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டின் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் கிராம வளர்ச்சி திட்டம் தயார் செய்து பணிகளை மேற்கொள்ள கிராம சபையின் ஒப்புதல் உள்ளிட்ட மொத்தம் 16 முக்கிய தீர்மானங்கள் கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்டன.


0 Comments