பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (11.10.2025) புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு பிரதமர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் விவசாயத் துறையில் ₹35,440 கோடி செலவிலான இரண்டு முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ₹24,000 கோடி செலவில் பிரதமரின் தன தானிய வேளாண் திட்டத்தை (தன் தான்ய கிரிஷி) அவர் தொடங்கி வைத்தார்.
₹11,440 கோடி செலவில் செல்படுத்தப்படும் பருப்பு வகைகளில் தற்சார்பு அடைவதற்கான இயக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், உணவு பதப்படுத்தும் துறைகளில் ₹ 5,450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதே நேரத்தில் சுமார் ₹ 815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.


0 Comments