Recent Post

6/recent/ticker-posts

தமிழகத்தில் அழிந்து வரும் 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ரூ.1 கோடியில் புதிய திட்டம் / New project worth Rs. 1 crore to protect 4 endangered species in Tamil Nadu

தமிழகத்தில் அழிந்து வரும் 4 வகை உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ரூ.1 கோடியில் புதிய திட்டம் / New project worth Rs. 1 crore to protect 4 endangered species in Tamil Nadu

தமிழகத்தில் மேற்கு மற்றும் கிழக்கு தொடா்ச்சி மலைகளைக் கொண்ட பகுதிகள், உலகளவில் பல்லுயிா் பெருக்க மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள, மேற்குத் தொடா்ச்சி மலை பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு, தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் வட நிலப்பரப்புகளில் காணப்படும் சென்னை முள்ளம்பன்றி, முதுமலை புலிகள் காப்பக நிலப்பரப்பில் வாழும் கழுதைப் புலி, மோயாறு ஆற்றில் வாழும் கூம்புத் தலை மஹ்சீா் மீன் வகை ஆகியவை அழிந்து வரும் உயிரினங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்த உயிரினங்களைப் பாதுகாக்க தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்து, அதற்காக ரூ.1 கோடியை ஒதுக்கியுள்ளது. அதன்படி, சிங்கவால் குரங்கை பாதுகாக்க ரூ.48.50 லட்சம், மெட்ராஸ் முள்ளம்பன்றிக்கு ரூ.20.50 லட்சம், வரி கழுதைப் புலிக்கு ரூ.14 லட்சம், கூம்புத் தலை மஹ்சீா் மீன் வகைக்கு ரூ.17 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிதியின் மூலம் அழிவு நிலையில் உள்ள இந்த உயிரினங்களின் வாழ்விடங்களைக் கண்காணித்து, அது தொடா்பாக ஆய்வுகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த உயிரினங்களுக்கு, அவை வாழும் இடங்களிலேயே பாதுகாப்பான இனப்பெருக்க மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இதுமட்டுமன்றி, வனத் துறை ஊழியா்களின் திறன் மேம்படுத்தப்படுவதுடன், விலங்குகளின் முக்கிய வாழ்விடங்களான மழைக் காடுகள், வட நிலங்கள், நதி அமைப்புகள் போன்றவற்றை முன்னேற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel